தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.2.12

மலேசியாவில் கைது செய்யப்பட்ட ஈரானிய ஆடவரை ஒப்படைக்க தாய்லாந்து கோரிக்கை

பேங்காக், 17 பிப்ரவரி- தாய்லாந்தில் சில நாட்களுக்கு முன் நிகழ் ந்த தொடர்பு குண்டுவெடிப்புச் சம்பவத்தோடு தொடர்புடையதாக ந ம்பப்படும் ஈரானிய ஆடவர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப் பட்டுள்ளார். அந்த ஆடவரை தங்களிடம் ஒப்படைக்கும் படி தாய் லாந்து அரசாங்கம் கோரிக்கை  விடுத்துள்ளது. இது சம்பந்தமாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் டாக்டர் Surapong Tovichakch aikul மலேசியாவிடமிருந்து சம்பந்தப்பட்ட அந்த
ஈரானிய ஆடவ ரைத் தாங்களே திரும்ப
பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளதாகக் கூறினார். சம்பந்தப்ப ட்ட அந்த ஈரானிய ஆடவர் முதல் நாள் இரவு தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து மலேசியாவுக்கு வந்து பின்னர் நேற்று தெஹ்ரானுக்குச் செல்ல  முயன்ற போது குறைந்த கட்டண விமான முனையமான LCCT-யில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட 31 வயது ஈரானிய ஆடவர் மலேசிய சுங்கத் துறை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டதாகவும், தற்போது தாய்லாந்தில் நிகழ்ந்த தொடர் குண்டு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் அரச மலேசிய காவல்துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: