நாட்டின் புதிய தொலைத் தொடர்புக் கொள்கையின் ஒரு ப குதியை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. இதில் கூறப்பட்ட விதிமுறைகள் குறித்து செல்போன் சேவையளி க்கும் நிறுவனங்கள் அதிப்தி தெரிவித்துள்ளன. தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் வெளியிட்ட புதிய கொள்கை விதிமுறைகளில், தொலைத் தொடர்பு நிறுவன ங்களுக்குக் கூடுதல் அலைக்கற்றை வழங்குவது; ஒரே மா திரியான உரிமக் கட்டணம் வசூலிப்பது;
அனைத்து உரிமங்களுக்கும் ஒருங்கி ணைந்த ஏலமுறை; உரிமம் காலம், கட்டணம் போன்றவற்றில் மாறுதல்கள் போன்றவை இதில் இடம்பெற்றிருக்கின்றன.
ஸ்பெக்ட்ரத்தையும் தொலைத் தொடர்பு உரிமத்தையும் தனித்தனியே பிரித்து அளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், "புதிய தொலைத் தொடர்புக் கொள்கையின் விதிமுறைகள் பெரும்பாலும் தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் பரிந்துரைப்படியே அமைந்திருக்கின்றன. எனினும், , ஒரே மாதிரியாக 8% உரிமக் கட்டணம் வசூலிக்கப் போவதாக அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது," என்று இந்திய செல்போன் சேவையளிப்போர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.மேத்யூஸ் கூறியுள்ளார்.
இந்தக் கட்டணம் இன்னும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்ததாக குறிப்பிட்ட அவர், உரிமக் கால அளவை 20 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாகக் குறைத்திருப்பது பற்றியும் அதிருப்தி தெரிவித்தார்.
"மிக அதிக அளவு முதலீடு செய்ய வேண்டிய தொலைத் தொடர்புத் துறையில் 10 ஆண்டுகள் என்பது மிகக் குறைந்த காலம்," என்றார் அவர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக