சில தினங்களுக்கு முன் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 2 மீனவர்கள் இத்தாலிய சரக்கு கப்பலை சேர்ந் தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இத்தாலிய படையினரை விசாரித்தபோது, இந்திய மீனவர்கள் அ வர்களது கப்பலை நோக்கி சுட்டதால் திரும்ப தாக்கிய தாக கூறினர்.ஆனால்
அவர்களது கப்பலில் துப்பாக்கி குண்டு தாக்கியதற்கான எந்த அடையாளமும் இல்லை. இந்திய மீனவர்கள் தங்கள் வலைகளை விரித்து விட்டு காத்திருக்கும்போது இத்தாலிய கப்பல் வருவதை கண்டு தங்களது வலைகளை பாதுகாக்க வேகமாக உள்ளே இழுக்கும்போது அவர்களுக்கு பீதி ஏற்பட்டிருக்கலாம் என துணை அட்மிரல் கே.என். சுசில் கூறியுள்ளார். கேரள போலீஸ் இத்தாலியர்களை இன்று கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக