தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.2.12

சீனாவில் பழுதாகி நின்று கொண்டிருந்த கப்பல் மீது மற்றொரு கப்பல் மோதி விபத்து.


சீனாவில் மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது, மற்றொரு சரக்கு கப்பல் மோதிய விபத்தில் 19 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். மூன்று பேரை தேடும் பணி நடக்கிறது.சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில், தெற்கு சீன கடலில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சரக்கு கப்பல், கடல் சீற்றத்தின் காரணமாக விபத்துக்குள்ளாகி மூழ்கி கொண்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த எட்டு பேர், கடலில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் பாலம்

ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதே வழியாக வந்த மற்றொரு சரக்கு கப்பல் மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கப்பலில் இருந்த 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன மூன்று பேரை தேடும் பணி நடக்கிறது.

0 கருத்துகள்: