தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.2.12

2 மகள்களை கொன்று மனைவி தற்கொலை: கள்ளக்காதலால் குடும்பத்தை இழந்த கணவன் வாக்குமூலம்


கோவை பீளமேடு சவுரிப்பாளையம் அன்னை வேளாங்க ண்ணி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். எலக்ட்ரீசியன். இவர் திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாந்தி(32). இவர்களுக்கு பிரிய தர்ஷினி (8), ஜீவதர்ஷினி (3) ஆகிய 2 பெண் குழந்தைகள் இ ருந்தனர்.  கடந்த 14-ந் தேதி இரவு
சாந்தி தனது 2 குழந்தைக ளை கொலை செய்து
விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இளைய மகள் ஜீவதர்ஷினிக்கு மருந்தில் மஞ்சள் சாணி பவுடரை கலந்து கொடுத்து உள்ளார். மூத்த மகள் பிரியதர்ஷினியின் கை, கால்களை கட்டி போட்டு கட்டையால் தலையில் பயங்கரமாக தாக்கியுள்ளார். இதில் பிரியதர்ஷினியின் மண்டை ஓடு 4 துண்டுகளாக நொறுங்கி இருந்தது பிரேத பரிசோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது.   
 
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது வீடு வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையால் தான் சாந்தி தனது குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் குழந்தைகளை சாந்தி கொடூரமாக கொலை செய்துள்ளதை பார்த்தால் வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர். 
 
இதனையடுத்து செல்வராஜை போலீசார் கைது செய்து துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-   
 
எனது மனைவி சாந்தி எனது அத்தை மகள் தான். திருமணமாக புதிதில் நாங்கள் திருப்பூரில் குடியிருந்தோம். பின்னர் கோவைக்கு வந்து எனது தாயுடன் இருந்தோம். அங்கு எனது தாய்க்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே நாங்கள் சவுரிபாளையத்தில் வாடகை வீட்டில் வசித்தோம். 
 
குழந்தைகள் 2 பேரையும் நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும். புதிதாக வீடு வாங்க வேண்டும் என திட்டம் போட்டு குடும்பம் நடத்தினேன். இந்த நிலையில் தான் திருப்பூரில் நான் வேலை பார்த்த கம்பெனியில் வேலை பார்த்த ஒரு பெண்ணிற்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. 
 
நாங்கள் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தோம். மனைவி, குழந்தைகளை மறந்து கள்ளக்காதலியே கதி என கிடந்தேன். முதலில் 2 நாளுக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்தேன். பின்னர் வாரத்திற்கு ஒரு முறையும் அல்லது 10 நாளுக்கு ஒரு முறையும் வந்தேன். 
 
சம்பள பணத்தையும் சரியாக கொடுக்காததால் மனைவிக்கு என் மீது சந்தேகம் வந்து விட்டது. ஒரு நாள் எனக்கு தெரியாமலேயே நான் வேலை பார்க்கும் கம்பெனிக்கு வந்து விட்டாள். அன்று நான் கள்ளக்காதலியுடன் திருப்பூர் பஸ் நிலையத்தில் நிற்பதை பார்த்து விட்டாள். அன்று முதல் எனக்கும் எனது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 
 
நான் வீடு வாங்காமல் இருப்பதற்கு காரணம் கள்ளக்காதல்தான் என எனது மனைவி சந்தேகப்பட்டாள். கள்ளக்காதலை கைவிடும்படி எனது மனைவி அடிக்கடிகூறி வந்தாள். ஆனால் அதை நான் கேட்காமலே இருந்து விட்டேன். இது எனது மனைவியை விரக்தி அடைய செய்துள்ளது. வீடு வாங்குவதிலும் பிரச்சினை தொடர்ந்ததால் அவள் மகள்களை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டாள். மனைவி பேச்சை கேட்காமல் போய்விட்டதால் இன்று நான் அவளையும் என் குழந்தைகளையும் இழந்து தவிக்கிறேன். இவ்வாறு செல்வராஜ் போலீசில் கூறியுள்ளார். 
 
சாந்தியை தற்கொலைக்கு தூண்டியதாக செல்வராஜின் கள்ளக்காதலியும் இந்த வழக்கில் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

0 கருத்துகள்: