தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.2.12

பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டுள்ள பின்லேடன் மனைவியை விடுவிக்க கோரி வழக்கு.


பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் பகுதியில் பதுங்கி இருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது அவருடன் தங்கியிருந்த அவரது மனைவி சதா மற்றும் 5 குழந்தைகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரகசிய இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் சதாவின் சகோதரர்
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 
எனது சகோதரி சதாவுக்கு காலில் குண்டு பாய்ந்துள்ளது. அவர் நடக்கமுடியாமல் உள்ளார். ரகசியமாக சிறைவைக்கப்பட்டுள்ள அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்று தெரியவில்லை. அவருடைய குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட எந்த வசதிகளும் அளிக்கப்படவில்லை. எனவே மனதளவில் அந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச மனித உரிமை சட்டப்படி ஒருவரை யாருக்கும் தெரியாத இடத்தில் போதிய வசதிகள் இல்லாமல் சிறைவைக்க கூடாது. எனவே சதாவையும், அவரது குழந்தைகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

0 கருத்துகள்: