சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பம் நடத்துவது குறித்த வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும், திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது தொடர்பாக, சவுதி அரேபிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.சவுதி அரேபியாவில் தற்போது, குடும்ப சண்டை அதிகரித்து வருகிறது. திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆண்கள் சிலர், பெண்களின் கன்னி தன்மை பரிசோதனை குறித்த மருத்துவ அறிக்கையை கேட்கின்றனர். இது போன்ற பிரச்னைகளையெல்லாம் குறைக்க, திருமணம் செய்து கொள்ள போகும் ஜோடியினருக்கு திருமணத்துக்கு
முன்பாக, சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பத்தை நடத்துவது குறித்த மேலாண்மை வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பாக, சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பத்தை நடத்துவது குறித்த மேலாண்மை வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது குறித்து, சவுதி நீதித்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. நீதித்துறை அமைச்சகத்தின் இந்த திட்டத்துக்கு, சமூகத்துறை அமைச்சகம் ஒத்துழைப்பு அளிக்க உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக