தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.2.12

ஊராட்சி மன்ற தலைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன


கடலூர் அருகே ஊராட்சி மன்ற தலைவிக்கு ஒரே பிரசவ த்தில் 3 குழந்தைகள் பிறந்ததுகடலூர் அருகே உள்ள பச் சையாங்குப்பத்தை சேர்ந்தவர் அழகசேன். இவருடைய மனைவி செல்வி. இவர் பச்சையாங்குப்பம் ஊராட்சி மன் ற தலைவியாக இருந்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணி யான செல்வி பிரசவத்துக்காக கடலூர் மஞ்சக்குப்பத்தி ல் உள்ள தனியார்
மருத்துவமனையில் கடந்த ஒருவாரத்துக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலையில் செல்விக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரை பிரசவ அறைக்கு டாக்டர்கள் கொண்டு சென்றனர். அங்கு சிசேரியன் முறையில் செல்விக்கு முதலில் பெண், 2-வது ஆண், 3-வது பெண் என அடுத்தடுத்து 3 குழந்தைகள் பிறந்தன.
முதல் குழந்தை 1 கிலோ 80 கிராம், 2-வது குழந்தை 2 கிலோ 120 கிராம், 3-வது குழந்தை 2 கிலோ 160 கிராம் எடை இருந்தன. குழந்தைகள் எடை குறைவாக இருந்ததால் இன்குபெட்டர் கருவியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. தாயும், 3 குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்: