தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.2.12

புதுடெல்லியில், இஸ்ரேல் தூதரகத்தை குறிவைத்து கார்க்குண்டு தாக்குதல்?!


டெல்லியில் இஸ்ரேலிய தூதரக காரில் இடம்பெ ற்ற வெடிப்புச்சம்வம் பலத்த சந்தேகத்தை ஏற்படு த்தியுள்ளது.இது கார்க்குண்டு தாக்குதலாக நடத்த ப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணை தக வல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் மனைவியார் உட்பட 4 பேர் இச்சம்ப வத்தில் காயமடந்துள்ளனர்.  இதே போன்று ஜோ ர்ஜியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை குறி வைத்தும் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஈ ரான் அரசும், லெபனான் கொரில்லா போராளிகள் குழுவின

ருமான Hezbollah உம் இணைந்து இத்தாக்குதலுக்கு பின்புலத்தில் செயற்பட்டிருக்கலாம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சனின் நெடன்யாஹு குற்றம் சுமத்தியுள்ளார்.
இஸ்ரேலின் குற்றச்சாட்டுக்கள் சுத்தப்பொய் : ஈரான் உடனடி மறுப்பு

எனினும் இக்குற்றச்சாட்டுக்களை ஈரான் உடனடியாக மறுத்துள்ளது. தீவிரவாத தாக்குதல்களை நாங்களும் கண்டிக்கிறோம். இக்குண்டுத்தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியிருப்பதை கடுமையாக நிராகரிக்கிறோம். இது சுத்தப்பொய். எப்போதும் போல திட்டமிட்டு பரப்படும் பொய்யுரைகள் என இந்தியாவுக்கான ஈரான் தூதுவர் தெரிவித்துள்ளார்.
 

0 கருத்துகள்: