தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.2.12

இங்கிலாந்தில் கிறிஸ்தவ ஆலயம் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றம்.


இங்கிலாந்தில் கிழக்கு மிட்லாண்ட் நாட்டிங்ஹாம் பகுதிக்குட்பட்ட பீஸ்டன் ரைலாண்ட் நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயம் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது. இந்நகரின் சுற்றுப்புற பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் கோயில் திட்டக்குழு நிர்வாகிகள் சிறந்த கோயில் கட்டி வருகின்றனர். இந்த கோயில் வரும் ஏப்ரல் மாதம் 8ம் தேதி திறக்கப்படுகிறது.இங்கு செயல்படும் யுனிவர்சல் சொசைட்டி ஆப் ஹிந்துயிசம் அமைப்பு தலைவர் ராஜன் இந்த கோயில் பணிகள்

குறித்து கூறுகையில்: இப்படி ஒரு கோயில் உருவாவது இந்து மதத்திற்கு இதுஒரு சிறந்த மைல்கல் ஆகும்.
ஆன்மிகம் பரப்புவதில் சிறந்த பங்காற்றும். இந்த பகுதியில் உள்ள திரை நட்சத்திரங்கள், பாடகர்கள், பேசன் டிசைனர் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: