தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.2.12

கேரளாவில் கோவில் யானைக்கு மதம் பிடித்தது. கார்கள் துவம்சம்.

கேரள மாநிலம் கொல்லத்தையடுத்த பன்னக்குளம் பகு தியில் காவுமுறி கோவில் உள்ளது. இக்கோவில் திரு விழாவையொட்டி இங்கு சாமி ஊர்வலம் நடந்தது. இத ற்காக பக்கத்தில் உள்ள மகாதேவர் கோவில் யானை நாராயணன்குட்டி அழைக்கப்பட்டிருந்தது. நேற்று கா லை யானைக்கு நெற்றிபட்டம் கட்டி அலங்கரிக்கப்பட் டு ஊர்வலம் நடந்தது.
யானை மீது சாமி சிலையை ஏந்தியபடி பூசாரி ஊர் வலமாக சென்றார். நெல்லாறு பாலத்தின் அருகே ஊர்வலம் சென்ற போது யானைக்கு திடீரென மதம் பிடித்தது. இதனால் யானை மிரண்டு ஓடியது. அதன் மீது சாமி சிலையை பிடித்தபடி அமர்ந்திருந்த பூசாரி மதுசர்மா(வயது27) கீழே விழுந்தார். உடனே உருண்டு புரண்டபடி அவர் யானையின் கால்களுக்கு இடையே புகுந்து அவர் தப்பி ஓடினார். கீழே விழுந்ததில் அவரது தலையிலும், கண்ணிலும் லேசான காயம் ஏற்பட்டது. பக்தர்கள் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இதற்கிடையே யானை அந்த வழியாகச் சென்றவர்களை விரட்டியது. மக்கள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது யானை சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார், டெம்போ வேன் ஆகியவற்றை துதிக்கையால் தூக்கி வீசி துவம்சம் செய்தது. மோட்டார் சைக்கிள்கள், இரு சக்கர வாகனங்களையும் அலாக்காக தூக்கி வீசியது. இது பற்றிய தகவல் அறிந்ததும் கால்நடை துறையினர் மற்றும் யானையை அடக்கும் குழுவினர் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.குழுவில் இருந்த டாக்டர் ஒருவர் துப்பாக்கியில் மயக்க ஊசி பொருத்தி யானையை நோக்கி சுட்டார். இதில் மயக்கம் அடைந்த யானையை கால்நடை டாக்டர்கள் கட்டுப்படுத்தி ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக நெல்லாறு பன்னக்குளம் பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானையை கால்நடை துறையினர் பிடித்துச் சென்ற பிறகே அப்பகுதியில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியது.

0 கருத்துகள்: