திரிபோலி:லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியில் எகிப்தின் முன்னாள் அதிபர் ஜமால் அப்துல் நாஸரின் சிலையை உள்ளூர் நிர்வாகம் உடைத்தது. நாஸரின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்நகரத்தில் உள்ள தெருவின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.1950 மற்றும் 1960 களில் அரபு தேசிய வாதத்திற்கு தலைமை தாங்கிய ஜமால் அப்துல் நாஸரை கெளரவிக்கும் விதமாக முன்னாள் அதிபர் முஅம்மர்
கத்தாஃபி சிலையை எழுப்பினார். அரபு நாடுகளின் ஐக்கியத்திற்கான தனது முயற்சிக்கு வழிகாட்டி ‘ஜமால் அப்துல் நாஸர்’ என கத்தாஃபி தொடர்ந்து கூறி வந்தார்.
கத்தாஃபி சிலையை எழுப்பினார். அரபு நாடுகளின் ஐக்கியத்திற்கான தனது முயற்சிக்கு வழிகாட்டி ‘ஜமால் அப்துல் நாஸர்’ என கத்தாஃபி தொடர்ந்து கூறி வந்தார்.
கத்தாஃபி ஆட்சியில் உள்துறை அமைச்சராகவும், பின்னர் எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்த ராணுவ அதிகாரி அப்துல் ஃபதஹ் யூனுஸின் பெயர் தெருவிற்கு சூட்டப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் மர்மமான முறையில் யூனுஸ் கொல்லப்பட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக