இந்திய வர்த்தகக் குழு ஈரான் செல்லவுள்ளதற்கு அமெரி க்கா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.அணுஉலை அமைத்து வரும் ஈரான் மீது சர்வதேச அளவில் பொருளாதாரத் த டைகளை விதிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வரு கிறது. அதற்காக தனது நட்பு நாடுகளை, ஈரானுடன் கொ ண்டுள்ள வர்த்தக உறவுகளை குறைத்துக் கொள்ளும்படி வலியுறுத்தி வருகிறது.அந்த வகையில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை
குறைத்துக் கொண்டு மாற்று வழிகளை ஆராயும்படி இந்தியாவை அந்நாடு சமீபத்தில் கேட் டுக்கொண்டது.
இத்தகைய சூழலில் வர்த்தகக் குழு ஒன்றை ஈரானுக்கு அனுப்பவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இது ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் உள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பிரிவினரிடையே ஆட்சேபத்தை உருவாக்கியுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பு இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகளிடையே பாதிப்பை உருவாக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய வெளியுறவுத் துறை செயலர் ரஞ்சன் மத்தாயிடம் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்திக் கொள்ளும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்தாய், ஆப்கனின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே ஈரானுடன் நட்புறவு கொண்டுள்ளதாக இந்தியாவின் நிலைபாட்டை எடுத்துரைத்தார். அமெரிக்கத் தரப்பினரும் ஈரானுடன் இந்தியா மேற்கொண்டுள்ள வர்த்தகத் தொடர்புக்கான அவசியத்தையும், அந்நாட்டிடமிருந்து இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்யும் சூழலையும் புரிந்து கொள்வதாகத் தெரிவித்தனர்.
இருப்பினும் எதிர்காலத்தில் ஈரான் மீது அமெரிக்கா தலைமையிலான நாடுகள் விதிக்கும் பொருளாதாரத் தடைகளை நீர்த்துப் போகச் செய்யும் விதமாக இந்தியாவின் வர்த்தக நடவடிக்கைகள் அமைந்தவிடக் கூடாது என்று வலியுறுத்தினர்.
வர்த்தக நடவடிக்கைகள் மூலமான வருவாயைக் கொண்டு அணு உலைத் திட்டத்தை ஈரான் முன்னெடுத்துச் செல்லக்கூடும் என்பதுவே அமெரிக்காவின் அச்சமாகும்.
இத்தகைய சூழலில் கடந்த வியாழக்கிழமை ஈரானுக்கு வர்த்தகக் குழுவை அனுப்பும் முடிவை இந்திய வர்த்தகத் துறை செயலர் ராகுல் குல்லா அறிவித்தது, அமெரிக்காவை எரிச்சலூட்டும் விதமாக அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலாவணியாக ரூபாயோ அல்லது ஏற்றுமதியை அதிகரிக்கவோ இந்தியா முடிவெடுத்துள்ளது. இந்த முடிவின் மூலம் ஈரான் மீதான அமெரிக்க நிலைப்பாட்டை இந்தியா கவனத்தில் கொள்ளவில்லை என்றே அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர்.
இதைத் தடுக்கும் விதமாக அமெரிக்க பாதுகாப்பு அங்கீகரிப்புச் சட்டம் 2012-ன் அடிப்படையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக