தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.2.12

பள்ளி ஆசிரியை கொலை செய்த மாணவன், சீர்திருத்த பள்ளியில் பெற்றோரை சந்திக்க மறுப்பு


சென்னையில் பள்ளி ஆசிரியை குத்தி கொன்ற மாண வர், தம்மை சந்திக்க சிறைக்கு வந்த பெற்றோரை பார் க்க மறுத்துள்ளார்.சென்னை ஆங்கிலோ இந்தியன் பள் ளியொன்றின் ஆசிரியை  வகுப்பறையில் வைத்து குத் திக்கொண்டதாக குற்றம் சுமத்தபட்டு சிறுவர் சீர்திருத் த பள்ளியில் குறித்த சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.அ ங்கு முதல்
நாள் மட்டும் மன இறுக்கத்துடன் காணப்ப ட்டதாகவும், பின்னர்
அங்குள்ள சிறுவர்களுடன் சேர்ந்து விளையாட தொடங்கி விட்டதாகவும் சீர்திருத்த பள்ளி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 'இன்று அவனை பார்க்க வந்த அவனது பெற்றோர் மற்றும் சகோதரிகளை அம்மாணவன் பார்க்க மறுத்துவிட்டதாகவும், குற்ற மனப்பான்மையினாலா அல்லது பெற்றோர் மீதுள்ள கோபத்தினாலா அவன் பார்க்க மறுத்துவிட்டான் என்பது தெரியவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
தொடர்ந்து வன்முறைப்போக்கான சினிமா படங்களை பார்த்தமையும் இம்மாணவன் கொலை செய்யும் அளவுக்கு சென்றதற்கு ஒரு காரணம் என அவனது வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
கொலை செய்வதற்கு முன் ஒரு நில நாட்களில் அக்னி பாத் எனும் புதிதாக  வெளிவந்த ஹிந்தி படத்தை 30க்கு மேற்பட்ட தடவை அம்மாணவன் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படத்தில் இதே போன்று கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: