சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டுக்கு எதிரான ஆர்பாட்டங்கள் நேற்று லெபனானுக்குள் நுழைந்துள்ள து. ஆஸாடத்துக்கு எதிரான ஆர்பாட்டங்கள் லெபனானி ல் மூன்று பேருடைய உயிர்களை குடித்து 23 பேரை படு காமடைய செய்துள்ளது. லெபனானில் உள்ள சன்னி மு ஸ்லீம்கள் இந்த ஆர்பாட்டத்தை நடாத்தினார்கள், இவர் களை எதிர்த்த அலவி முஸ்லீம்களுக்கும் இவர்களுக்கு ம் இடையே கிரனைட் வீச்சுக்கள் இடம் பெற்றன. இதில் ஒரு சன்னி
முஸ்லீமும் ஓர் அலவி முஸ்லீமும் ஒரு பதினேழுவயது சிறுமியு ம் மரணித்தனர்.கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே இரு தரப்பு மோதல்களும் சூடு பிடித்து ஆறுபேர் அநியாயமாக கொல்லப்பட்டது பழைய கூத்தாட்டமாகும். தெருவுக்கு தெரு ஆயுதம் ஏந்தி ஆளுக்கு ஒரு கொள்கையுடன் லெபனானில் போராளிக்குழுக்கள் கடை விரித்துள்ளன. இந்த சன்னி முஸ்லீம்கள் கிரனைட் துப்பாக்கிகளுடன் அடைந்துள்ள சன்னதம் அலவி முஸ்லீம்களுக்கு பாரிய வயிற்றுக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள போராளிக்குழுக்கள் கிரனைட், மோட்டார் தாக்குதல்களில் மன்னர்களாக இருப்பதால் பொது மக்கள் மரணமடைய அதிகரிக்க வாய்ப்புள்ளது. சிரிய விவகாரம் லெபனானுக்குள் நுழைந்தது மேலும் பல அழிவுகளை ஏற்படுத்தப்போகிறது. காடு சுட எலி புறப்பட்டது போல அங்கிருக்கும் ஹிஸ்புல்லாவுக்கு இது சிக்கலை கொடுக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் ஹிஸ்புல்லா என்ற கொழுத்த எலியை பிடிக்க இஸ்ரேல்என்ற நாசகரகும்பல் பொறி வைத்து நீண்ட காலமாக காத்துள்ளது.
சிரிய சர்வாதிகாரி ஆஸாத் றெஜீமை அந்த நாட்டில் நின்று இப்போதும் ஆதரிப்பது அந்நாட்டு அலவி முஸ்லீம்களாகும். மேலும் லெபனான் பிரதமர் படுகொலையில் சிரிய ஆஸாட்த்தின் மீது இப்போதும் குற்றச்சாட்டு உள்ளது. லெபனானின் உள்நாட்டு விவகாரங்களில் ஆஸாத் தலையிட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு அவருடைய வீழ்ச்சிக்கு அடுத்த நாள் விசாரணைக்கு வரும் என்று நம்பலாம்.
இது இவ்விதமிருக்க அல்காய்தா அமைப்பின் இப்போதைய தலைவர் அய்மான் அல் ஜவாகிரி இன்று ஓர் ஒளி நாடவை வெளியீடு செய்துள்ளார். அதில் சிரிய அதிபர் ஆஸாத்துக்கு எதிரான மிகவும் மோசமான கருத்துக்களை முன் வைத்துள்ளார். சிரிய சர்வாதிகாரிக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டுமென்று கேட்டுள்ளார். ஏற்கெனவே பின்லேடனை காட்டிக் கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டு அய்மான் அல் ஜவாகிரி மீது உள்ளது. இந்த ஒளிநாடா அல் காய்தா இப்போது அமெரிக்க பக்கம் சார்ந்துவிட்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும் லிபியாவிலும் கடாபிக்கு எதிராக அல் காய்தா போரிட்டதாக சொல்லப்படுகிறது
மறுபுறம் சிரியாவின் அதி உயர் இராணுவ பிரிகேட் படைப்பிரிவு ஜெனரலும் வைத்தியருமான இஸா அல் கோவ்லி தனது வீட்டில் இருந்து வெளியே வரும்போது வாசலில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று நடைபெற்றது. கடந்த 11 மாதங்களாக நடைபெறும் ஆர்பாட்டங்களில் ஆஸாத் தரப்பு இழந்துள்ள பாரிய இழப்பு இதுவாகும். இதற்கு பதிலடியாக கோம்ஸ் நகரை நோக்கி சிரிய இராணுவம் சரமாரியாக எறிகணைகளை வீசித்தாக்கியது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக