அட்டு(மாலத்தீவு), நவ. 13- ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், நேபாள பிரதமர் பாபுராம் பட்டராய் ஆகியோரை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசினார். மாலத்தீவுகளின் அட்டு நகரில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டின் நிறைவு நாளன்று இந்த சந்திப்புகள் நடைபெற்றன. போரில் இருந்து மீண்டு வரும் ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்து இரு தலைவர்களும் முக்கியமாக
விவாதித்ததாக தெரிகிறது. இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்சாய், போருக்குப் பின் ஆப்கானிஸ்தானுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் நாடு இந்தியாதான். ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு வகைகளில் உதவியுள்ளது. இரு நாடுகளிடையே எப்போதும் நல்லுறவு நிலவுகிறது. ஆப்கானிஸ்தானின் மிக நெருங்கிய நட்பு நாடு இந்தியாதான் என்று தெரிவித்தார். இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக மன்மோகன்சிங்குடன் பேசியதாக நேபாள பிரதமர் பாபுராம் பட்டராய் தெரிவித்தார். முன்னதாக 3 வாரங்களுக்கு பட்டராய் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போதும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேசப்பட்டது. நேபாளத்தில் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து மன்மோகன்சிங்குடன் விளக்கினேன். அவர் அதற்கு வரவேற்பு தெரிவித்தார். இரு நாடுகள் இடையே விரைவில் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் மன்மோகன்சிங் உறுதியளித்தார் என்று பட்டராய் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக