தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.11.11

அரபு லீக்கை உடனடியாகக் கூடுங்கள் சிரியா அவசர அழைப்பு


பொது மக்களை படுகொலை செய்வதையும், மக்கள் மீது இராணுவத்தை ஏவுவதையும் இதுவரை சிரியாவின் சர்வாதிகார ஆட்சி நிறுத்தவில்லை. இந்தநிலையில் சிரியாவை அரபுலீக்கில் இருந்து இடை நிறுத்தம் செய்வதாக நேற்று அறிவித்தது அரபு லீக். இந்த முடிவானது சர்வதேச சமுதாயம் சிரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான புதிய கதவையும் திறந்துவிட்டது. சர்வதேச சமுதாயத்தின் வேண்டுதல்களை ஒழுங்குபட நிறைவேற்றாது
ஏமாற்றும் ஓர் அரசுக்கு எதிரான சர்வதேச எதிர் நடவடிக்கைகளை அது வரவேற்றும் இருந்தது. இந்த அறிவிப்பு தனது நிர்வாகத்திற்கு பலத்த அடியாக இறங்கப்போவதை உணர்ந்து கொண்ட சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட் அரபுலீக்கை உடனடியாக கூட்டும்படி சற்று முன்னர் வேண்டுகோள் விடுத்தார். மறுபுறம் அரபுலீக்கின் முடிவை துருக்கி வரவேற்றதைத் தொடர்ந்து ஆஸாட்டின் ஆதரவாளர்கள் 1000 பேர்வரை டமாஸ்கஸ்சில் உள்ள துருக்கி தூதரகத்தின் மீது தாக்குதலை நடாத்தினார்கள். மேலும் சிரியாவின் லற்றாக்கியா நகரில் உள்ள துருக்கி கொன்ஸ்சலேற் தர தூதராலயமும் தாக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 5000 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். நேற்று சனிக்கிழமை டாமாஸ்கசில் உள்ள சவுதி அரேபியா, கட்டார் நாட்டு தூதரகங்கள் தாக்குதலுக்குள்ளாகின. சர்வதேச சமுதாயத்தை பகைப்பதைத்தவிர வேறு வழியற்ற சுரங்க வழிக்குள் சிரியா தொடர்ந்து சிக்குப்பட்டுவருகிறது. மேலும் சிரியாவின் அவசர வேண்டுகோள் குறித்து இதுவரை அரபுலீக் கருத்துரைக்கவில்லை. ஆனால் கடந்த காலங்களில் செல்லாக்காவு தாபனமாக இருந்த அரபுலீக்கானது எகிப்து, ரூனிசியா, லிபியாவில் ஏற்பட்ட புரட்சிகளின் வெற்றிக்குப் பின்னர் சக்திமிக்க தாபனமாக மாறிவருகிறது. கிழடு தட்டி பொருக்கேறிக் கிடந்த இந்த பாலைவன ஒட்டகம் தற்போது சொறி கொட்டுப்பட்டு, இளமை பெறுகிறது. இதுபோல ஒரு கிழட்டுத் தாபனம் கூட அயலில் இல்லாத அவலமே இலங்கை தமிழ் மக்களுக்கு இருந்தது கவனிக்கத்தக்கது. 140.000 பேர் குறுங்காலத்தில் கொல்லப்பட அதற்காக குரல் கொடுக்க அதிகாரமிக்க ஒரு கிழட்டு லீக்கூட அருகில் இல்லாமல் போனது வேதனைக்குரியதே.

0 கருத்துகள்: