லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் நைஜர் சாடி கடாபி நைஜர் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக 8 மாத காலம் போராட்டம் நடந்து வந்த நிலையில், சிர்த் நகரில் புரட்சி படையினரால் கடாபி கொல்லப்பட்டார்.
அதற்கு முன்னதாகவே, அவரது மனைவி, மகள் மற்றும் 2 மகன்கள் அல்ஜீரியாவில் தஞ்சம் அடைந்தனர். மற்றொரு மகன் சாடி கடாபி (38) தனது ஆதரவாளர்களுடன் நைஜர் நாட்டுக்கு தப்பி வந்தார்.
அங்கு தனக்கு தஞ்சம் அளிக்கும்படி அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.தற்போது அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு உள்ளது.
நைஜீரில் அவர் தஞ்சம் அடைய அனுமதி அளித்து இருப்பதாக அந்நாட்டு அதிபர் முகம்மது இசோபோ தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரெடோரியா நகரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இத்தகவலை இசோபோ வெளியிட்டார்.
மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு அடைக் கலம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அகதி போன்று அவர் நடத்தப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக