தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.11.11

கலாமிடம் விமான நிலையத்தில் சோதனை : நாங்களும் பதிலடி கொடுக்க நேரிடும் : இந்தியா

அமெரிக்காவில் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில், இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம்வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனம்  தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், இது தொடர்ந்தால் தாங்களும் அதே போன்று பதிலடி கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.2009ம் ஆண்டு கலாம் அமெரிக்காவுக்கு சென்றிருந்த போதும், இதே போன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அப்போது அதற்கு மத்திய அரசிடம் இச்செயலுக்கு அமெரிக்கா தனது வருத்தத்தை தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் கலாம் அமெரிக்கா சென்ற போது, ஜான் எப்.கென்னடி விமான நிலையத்திற்கு வந்திருந்த கலாமிடம் மற்ற பயணிகளை சோதனை செய்தது போன்று அதிகாரிகள் அவரிடமும் சோதனை நடத்தியுள்ளனர்.

இதை தொடர்ந்து கலாம் ஏர் இந்தியா விமானத்தில் ஏறி தனது இருக்கையில் அமர்ந்த பின்னரும், அங்கு மீண்டும் வந்த அதிகாரிகள் கலாமின் கோர்ட் மற்றும் ஷூவை கழட்டுமாறு கூறி, அவற்றில் வெடிகுண்டு அல்லது வெடிபொருட்கள் ஏதும் உள்ளனவா என சோதனை நடத்தியுள்ளனர்.

ஏர் இந்திய விமான அதிகாரிகள், அவர் முன்னாள் ஜனாதிபதி என கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தவரக்ள் அதை பொருட்படுத்தவில்லை. இதையடுத்து ஏர் இந்திய அதிகாரிகள் மத்திய அரசிடம் புகார் கொடுத்ததை அடுத்து, தற்போது இத்தகவல் வெளிவந்துள்ளது.
இரண்டாம் இணைப்பு :
அமெரிக்க அதிகாரிகள் சோதனை நடத்தியதால், கலாமுக்கு ஏற்பட்ட அவமரியாதைக்கு நாங்கள் மிகவும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கலாமுக்கும், இந்திய அரசுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்திலேயே அமெரிக்க தூதரகம் கடிதம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்: