தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.11.11

உலக வெப்பம் எப்படி ஒரு பாகை செல்சியஸ் உயர்ந்தது? : 2 நிமிட வீடியோவில் எச்சரிக்கை மணி!


நிரூபித்துள்ளார்கள் விஞ்ஞானிகள். 1950ம் ஆண்டிலிருந்து உலக சனத்தொகை எப்படி 1 பாகை செல்ஸியஸ் உயர்ந்துள்ளது என இரண்டு நிமிடம் கொண்ட இந்த வீடியோ துல்லியமாக காண்பிக்கிறது. கலிபோர்னியாவை சேர்ந்த Berkeley பல்கலைக்கழகத்தின் உலக வெப்பநிலை பற்றிய (BEST) ஆராய்ச்சி ஒன்றின் முடிவில்,  1950ம் ஆண்டிலிருந்து, உலக சராசரி வெப்பநிலை 1 பாகை செல்சியஸ்
வெப்பநிலையால் உயர்வடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.'உலகம் வெப்பமயமாகி வருகிறது' என்பதை எச்சரிக்கை மணி அடித்து, ஒரு வீடியோ மூலம்


பௌதீகவியல் விஞ்ஞானியும் பேராசிரியருமான Richard Muller என்பவர் 1800 ம் ஆண்டிலிருந்து 2009 வரையில் உலக வெப்பநிலை மாற்றம் பற்றிய தகவல்களை பெற்று இந்த புள்ளிவிபர அட்டவனையை தயாரித்திருக்கிறார்.

இதற்கென உலகெங்கிலும் 15 வகையிலான நிறுவனங்களிடமிருந்து 1.6 பில்லியன் வெப்பநிலை அறிக்கைகள் பெறப்பட்டு இப்புள்ளிவிபரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாதல் பற்றி விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கும், இதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் அக்கறை இல்லாதவர்களுக்கும் நிச்சயம் இவ்வீடியோ பாடம் சொல்லித்தரும்! மேலதிக தகவலுக்கு : http://berkeleyearth.org

0 கருத்துகள்: