தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.11.11

பாகிஸ்தானில் இரண்டு அணு உலைகள் அமைக்க சீனா தொழில்நுட்ப உ


இரண்டாயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் படைத்த 2 அணு உலைகளை சீனாவிடம் இருந்து வாங்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவுக்கு வழங்குவது போல தங்களும் அணு தொழில்நுட்ப உதவிகள் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா உள்பட பல மேற்கத்திய நாடுகளிடம் பாகிஸ்தான் கேட்டது. ஆனால், அணுஆயுத பரவல்
தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என்று கூறிவிட்டதால், பாகிஸ்தானுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை தருவதற்கு மற்ற நாடுகள் மறுத்துவிட்டன.
மேலும், பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான், லிபியா, வடகொரியா போன்ற நாடுகளுக்கு அணுஆயுத தொழில்நுட்பங்களை ரகசியமாக கொடுத்த விவகாரமும் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் பாகிஸ்தானுக்கு அணு தொழில்நுட்பம் வழங்க அமெரிக்க மறுத்துவிட்டது.

இதற்கிடையில் பாகிஸ்தானில் நிலவும் கடும் மின்சார பற்றாக்குறை போக்க, அணு உலை தொழில்நுட்பத்தை வழங்க சீனா முன்வந்தது. அதன்படி பஞ்சாப் மாகாணம் சாஸ்மா பகுதியில் 2 அணு உலைகள் அமைக்க சீனாவுடன் கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தான் ஒப்பந்தம் மேற்கொண்டது.
கடந்த மே மாதம் சாஸ்மா பகுதியில் அணு உலைகள் அமைக்கம் பணிகளை பிரதமர் யூசுப் ரசா கிலானி தொடங்கி வைத்தார். இந்நிலையில் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகளை நிறுவன பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதற்காக சீன தேசிய அணு கழகமும் பாகிஸ்தான் அணுசக்தி கமிஷனும் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளன.

0 கருத்துகள்: