அட்டு(மாலத்தீவு), நவ. 13- ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், நேபாள பிரதமர் பாபுராம் பட்டராய் ஆகியோரை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசினார். மாலத்தீவுகளின் அட்டு நகரில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டின் நிறைவு நாளன்று இந்த சந்திப்புகள் நடைபெற்றன. போரில் இருந்து மீண்டு வரும் ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்து இரு தலைவர்களும் முக்கியமாக