தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.10.11

சீன உளவாளி ரஸ்யாவில் கைது இரு நாடுகளுக்குமிடையே வலுக்கிறது மோதல்..


வெறுமனே கிடந்த சீனா விறுவிறுவென சோவியத் சீனாவாக மாறிவிட்டது என்ன செய்யப்போகிறது ரஸ்யா..
….
சீனாவும், ரஸ்யா ஆகிய இரண்டு நாடுகளுக்குமிடையே பாரிய மோதல் அறநீராக ஓடிக்கொண்டிருப்பதாக இன்றைய அதிகாலை ஐரோப்பிய செய்திகள் தெரிவிக்கின்றன. அதை கச்சிதமாக வெற்றி கொள்ளவே ரஸ்ய பிரதமர் விளாடிமிர் புற்றின் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளார் என்றும் கூறுகின்றன.

இந்த ஆய்வுகளில் இருந்து திரட்டக்கூடிய தகவல்கள் இப்படியுள்ளன :
சீனாவும், ரஸ்யாவும் கம்யூனிசத்தின் அடிப்படையில் கொண்டிருந்த நட்பு இதுவரை ரஸ்யாவை கம்யூனிச அண்ணனாகவும், சீனாவை தம்பியாகவும் காட்டி வந்தது, ஆனால் ரஸ்யர்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக சீனா எடுத்த நகர்வு தற்போது சீனாவை அண்ணனாக்கி ரஸ்யர்களை தம்பியாக்கிவிட்டது, இதற்கான காரணங்கள் வருமாறு :
01. ரஸ்யாவின் அதி நவீன ஏவுகணைத் தொழில் நுட்பத்தை சீன உளவுப்பிரிவின் உளவாளி ஒருவர் கண்காணித்து தகவல் வழங்கி வந்திருக்கிறார். ஏற்கெனவே இவரை கைது செய்து விசாரித்த கே.ஜி.பி சென்ற வாரம் இதை அம்பலப்படுத்தியுள்ளது.
பத்து வருடங்களுக்கு முன் ரஸ்ய – சீன உறவில் ஒரு புதிய ஏரா ஓடப்படுகிறது என்று விளாடிமிர் புற்றின் சீனாவில் வைத்து தெரிவித்த கருத்தை இந்த நிகழ்வு கேள்விக்குறியாக்கியுள்ளது.
02. சோவியத் ரஸ்யா உடைந்தபோது அதனுடைய கட்டுப்பாட்டில் இருந்த நாடுகள் எல்லாமே ஏறத்தாழ கம்யூனிச தைலம் குடித்த நாடுகளாகவே இருந்து வருகின்றன. இந்த நாடுகளின் பழைய கம்யூனிச பித்தச் சுரப்பியை சரியாக அடையாளம் கண்டு சீனா வளைத்துப் போட்டுவிட்டது. தனது கம்யூனிச சாம்ராஜ்ய காந்தத்தோடு பழைய சோவியத் நாடுகளை ஒட்ட வைத்துவிட்டது.
இதற்கு உதாரணங்கள் : ரஸ்யாவை புறந்தள்ளி உக்ரேனுடன் சீனா 3.5 பில்லியன் டாலர்களுக்கு எரிவாயு ஒப்பந்தம் செய்துள்ளது. சீன பிரதமர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்போது உக்ரேனை சின்ன ரஸ்யா என்று பாராட்டியுள்ளார். ஆகவே ரஸ்யாவிற்கான எதிரியை சீனா 3.5 பில்லியன் டாலரில் கச்சிதமாக தயார் செய்துள்ளது. சிறீலங்காவில் கூலிக்கு குண்டு வீசிய உக்ரேன் இப்போது ரஸ்யாவுக்கு பக்கத்தில் புதிய பொல்பொட்டாக உருவாகியுள்ளது.
இதுபோல ருக்மெனிஸ்ரானுடன் 4 பில்லியன் டாலருக்கு எரிவாயு ஏற்றுமதி செய்ய சீனா உடன்படிக்கை செய்துவிட்டது. இப்படியாக ரஸ்யாவில் இருந்து பிரிந்த அத்தனை நாடுகளிலும் சீனாவின் இரும்புக் கரம் பல பில்லியன் டாலர் செலவில் ஆழமாக வேரோடிவிட்டது.
இவற்றையெல்லாம் உதாரணம் காட்டி சீனாவின் திட்டமிட்ட செயற்பாடுகளால் ரஸ்யா பின்தள்ளப்பட்டுவிட்டதாக கஸகஸ்தான் நியூஸ் ஒன்லைனில் ஆய்வாளர் வொன் ஏகெற் தெரிவிக்கிறார். இதுவரை கம்யூனிச தம்பியாக இருந்த சீனா இனி ரஸ்யாவுக்கு கம்யூனிச அண்ணனாக உயர்ந்துவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் சீனாவுக்கான 90 வீதமான ஆயுதங்களை விற்பனை செய்யும் நாடாக ரஸ்யா இருந்தது, கடந்த பத்தாண்டுகளாக இந்த வர்த்தகம் நடைபெறுகிறது. தற்போது சீனாவின் செயல் காரணமாக இந்த வர்த்தகத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக இந்த வர்த்தகத்தில் தளர்வு தெரிவதாக சுவீடன் கூறுகிறது. மேலும் ரஸ்யாகூட சீனாவுக்கு நவீன ஏவுகணைகளை விற்பதை விரும்பாமல் உள்ளது என்றும் அது கூறுகிறது. ரஸ்ய தயாரிப்புக்களை வேண்டும் அதே நேரம் அதையே மறுபடியும் பிரதி பண்ணி சீனா விற்றுவருவதும் கவனிக்கத்தக்கது.
கடந்த யூன் மாதம் சீன பிரதமர் ரஸ்யா சென்று வரும் 30 ஆண்டுகளுக்கு ரஸ்யாவிடமிருந்து எரிவாயுவை பெறுவதற்கான 1000 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார். இப்போதுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருமா என்பது சந்தேகமாகியுள்ளது.
சுவீடனில் உள்ள சர்வதேச சமாதான ஆய்வு நிலையம் நேற்று வெளியிட்ட செய்தி, இரு நாடுகளின் உறவிலும் மோசமான விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக இருந்த இராணுவ கூட்டுறவும், எரிபொருள் விநியோகமும் தொடர்ந்தும் அதே நிலையில் இருக்காது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் கடந்த வாரம் சிரியாவுக்கு ஆதரவாக இரண்டு நாடுகளும் ஐ.நா பாதுகாப்பு சபையில் வீட்டோ பாவித்தது அவர்களுடைய ஒற்றுமையைக் காட்டாது என்றும், தமக்கு வரக்கூடிய ஆபத்திற்கு பயந்தே வீட்டோ பாவித்தனரே அல்லாமல் நட்பினால் அல்ல என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இவற்றின் அடுத்த பக்கம் :
ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள ஏழை நாடுகளை எல்லாம் தனது கைக்குள் போட்டு, ஆபிரிக்க வர்த்தகத்தில் அமெரிக்காவை முந்திய சீனா, பழைய பல்லுப்போன பனிக்கரடியான ரஸ்யாவின் அண்டை நாடுகளையும் இழுத்துப்போட்டு, இன்னொரு சோவியத் சீனாவாக மாறியிருக்கிறது.
சிறீலங்காவை ஒரு கம்போடியா போலவும், சிங்கள ஆட்சியாளரை பொல்பொட் போலவும் சீனா வழிநடாத்தியதற்கு 2009 ம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற நிகழ்வுகள் நல்ல உதாரணம். இப்படிப்பட்ட சீனாவுடன் நேரடியாக முட்டுவதைவிட மேலை நாடுகளும் ரஸ்யாவும் சீனாவுடன் முட்டுப்பட்டு அழிவடையும் வரை காத்திருக்கலாம் என்ற இந்திய இராஜதந்திரம் ஈழத் தமிழரை சுடுகாட்டில் எரித்து சாம்பல் காடாத்து நடாத்தியதும் தெரிந்ததே. இதுபோன்ற ஓர் இராஜதந்திரத்தையே இப்போது புற்றின் கையில் எடுத்திருக்கிறார்.
எப்போதுமே வரலாற்றில் பொல்பொட்டுக்களை உருவாக்கும் நாடாகவே சீனா இருக்கிறது. அதைப் பகைப்பதைவிட அதையே ஒரு பொல்பொட்டாக்கி களமிறக்க முடியுமா என்ற பரிசோதனைக்கு ரஸ்ய பிரதமர் தயாராகி வருகிறார்.
இந்திய தேசியக் கொடியை இந்தியாவை விட மலிவான விலையில் அச்சடித்து, இந்தியாவிலேயே விற்றுக் கொண்டிருக்கும் சீனா, ரஸ்ய தேசிய கொடியையும் அச்சடித்து ரஸ்யாவிலேயே மலிவு விலைக்கு விற்பதற்கு முன் அவர் விளித்துக் கொண்டுள்ளார்.
அவர் இன்று சீனாவுக்கு விஜயம் செய்து தனது புதிய கொள்கைகளை சீன அதிபருக்கு விலாவரியாக விவரிக்க இருக்கிறார். அதை அடிப்படையாக வைத்து தனது அதிபர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்க இருக்கிறார்.
அவர் சீனா போவதற்கு முன்னர் சீன உளவாளி பிடிபட்ட ரகசியத்தை வெளியிட்டுவிட்டு செல்லும் நோக்கம் சீனாவுடன் மோதாமலே அதை படிய வைக்கவே என்றும் கூறப்படுகிறது.
பிறிக் நாடுகளான சீனா, பிரேசில், இந்தியா, ரஸ்யாவை இணைத்து புதிய இராணுவ அணியாக மலர முடியுமா என்ற கனவுடன் அவர் சீனாவில் கால் பதித்துள்ளதாகவும் தெரியவருகிறது..
சீனாவை எப்படி கையாளுவது..? இதுதான் அரசியல் இராஜதந்திர பலகையில் இப்போது நடக்கும் அறிவியல் போர்..
இந்த இரண்டு விடயங்களையும் சீர்தூக்கி ஈழத் தமிழர்கள் புதிய வியூகங்களை வகுக்க வேண்டும். ஈழத்தின் இனப்பிரச்சனைக்கு இந்த அணுகு முறைகள் மிகவும் அவசியமானவை.
அலைகள் ஆசிய விவகாரப் பிரிவு 13.10.2011

0 கருத்துகள்: