வேலூர்:தோல் தொழிலில் பிரசித்திப் பெற்ற ஆம்பூர் நகர் உள்ளாட்சி தேர்தலில் கடந்த 60 வருடங்களாக ஹிந்து முஸ்லிம் மக்களின் மத்தியில் எழுதப்படாத உடன்படிக்கை மிகவும் கவனமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு கடைபிடிக்கப்படும் உடன்படிக்கையின் விவரம் வருமாறு “முனிசிபாலிட்டி தலைவர் பதவிக்கு ஒருமுறை முஸ்லிம் சமூகத்தின் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவருக்கு துணைத்
தலைவராக ஒரு ஹிந்து சகோதரர் போட்டியிடுவார் மேலும் அடுத்த முறை ஹிந்து சமூகத்தை சேர்ந்த ஒருவர் தலைவருக்கு பதவிக்கு வந்தால் அவருக்கு துணைத் தலைவராக ஒரு முஸ்லிம் மட்டுமே வரமுடியும் என்பதுதான் அந்த உடன்படிக்கையின் சாராம்சம்”.சென்ற முறை நடந்த உள்ளாட்சி தேர்தலில் முஸ்லிம்களின் முறை ஆகையால் தி.மு.க வேட்பாளராக நசீர் அஹ்மத் நிறுத்தப்பட்டு தன்னுடைய எதிர் வேட்பாளரான அ.தி.மு.க சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளரை தோற்கடித்து வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை பெண்களுக்கான பொது தொகுதியும் ஹிந்து சமூகத்தின் முறையும் ஆகும் எனவே அனைத்து கட்சிகளும் தங்களின் பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால் பெரும் போட்டி நிலவுகிறது.
நன்றி ;தூது ஆன்லைன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக