தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

14.10.11

மலேசியாவில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக தம்பதியர் உட்பட மூவர் கைது


பெசுட், அக்டொபர்12- 23 மற்றும் 23 வயதுடைய தம்பதியரும் 24 வயதுடைய ஆடவர் ஒருவரும் நெடுஞ்சாலை ஓய்வெடுக்கும் இடத்தில் RM 50,000 ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டனர். இச்சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் ஜெர்தெ நெடுஞ்சாலை அருகே நிகழ்ந்தது.
சம்பந்தப்பட்ட அந்த நெடுஞ்சாலை
ஓய்வெடுக்கும் பகுதியில் பொதுமக்கள்
அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அம்மூவரும் பயணித்த காரில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பெசுட் காவற்துறை சுப்ரிடெண்டன் கமாருடின் முகம்து சக்காரியா கூறினார்.


கைது செய்யப்படும் வேளையில், அந்த 24 வயது ஆடவர் கையில் ஒரு பொட்டலத்துடன் நெடுஙஞ்சாலையை நோக்கி தப்பியோடியதாகவும், போலீசார் அவனை விரட்டி பிடித்தபோது அப்பொட்டலத்தை அவன் வீசியெறிந்ததாகவும் அவர் கூறினார்.
 அந்த ஆடவன் வீசியெறிந்த பொட்டலத்தில் 4 நீல நிற பைகளில் 796 போதை மாத்திரைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இம்மூவரும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரணதண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: