ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) 'சேனல் 4' ஊடக
நிறுவனம் உருவாக்கியிருந்த -இலங்கையின் கொலைக்களம்- ஆவணப்படம் ஒளிபரப்பட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், மற்றும் பல அரசசார்பற்ற மனித நேய அமைப்புக்களின் ஆதரவுடன், Alliance of Liberals and Democrats of Europe கட்சி
தலைமையில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் அனா கோம்ஸ், இந் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். சுமார் 200க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த ஆவணபப்டத்தை பார்வையிட்டுள்ளதுடன், இலங்கை அரசுக்கு எதிரான தமது கடுமையான அதிருப்தியையும் வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில், ஐரோப்பிய ஒன்றியம், லுக்செம்பேர்க் மற்றும் பெல்ஜியத்துக்கான இலங்கை தூதுவர், ரவிநாத் ஆரியசிங்கவும் கலந்து கொண்டு, இலங்கை அரசுக்கு எதிரான இந்த ஆவணப்படத்தை கடுமையாக மறுதலித்து பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆவணபடம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஒளிபரப்புவதற்கு திட்டமிடத்தொடங்கிய போதே, இலங்கை அரசின் சார்பில், இதனை கடுமையாக எதிர்த்திருந்த ரவிநாத் ஆரியசிங்க, ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் டாக்டர். ஜெர்சி புஷெக்கிடமும் தனிப்பட்ட வகையில் இதனை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக