எகிப்தில் மக்கள் புரட்சியின் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் முபாரக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது. தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் போது புதிய அதிபர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என மக்கள் தெரிவித்தனர். அதை தற்போது ஆளும் ராணுவ ஆட்சி ஒப்புக் கொண்டது.
செப்டம்பர் 30-ந்தேதிக்குள் அதிபர் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்து இருந்தது. அதன்படி அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 28-ந்தேதி நடைபெறும் என ஆட்சி அதிகாரம் பெற்றுள்ள சுப்ரீம் கவுன்சில் நேற்று அறிவித்தது. தேர்தல் முடிவு வருகிற ஜனவரி 10-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. இதை உலக நாடுகள் வரவேற்றுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக