பாட்னா, செப். 29- "பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி நடத்தும் ரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம்" என்று லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி அறிவித்து உள்ளது. அந்த கட்சியின் பீகார் மாநில தலைவர் ராமச்சந்திர பூர்வா, பொதுச் செயலாளர் ராம்கிருபால் யாதவ் ஆகியோர் இது பற்றி கூறியதாவது:-
கடந்த முறை ராமர் கோவிலுக்காக அத்வானி ரத யாத்திரை நடத்தியபோது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது உலகம்
முழுவதற்கும் நன்கு தெரியும். ஆகவே, இப்போதும் அவரது ரத யாத்திரை சமூக, மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும். கடந்த முறை அவரது ரத யாத்திரையை முதல்-மந்திரியாக இருந்த லாலு பிரசாத் தடுத்தார். அதேபோல், இந்த ரத யாத்திரையையும் தேவைப்பட்டால் தடுத்து நிறுத்துவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக