துபாய், செப். 29- ஷார்ஜாவில் நடந்த கொலை வழக்கில் 17 இந்தியர்கள் மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஐக்கிய அரபு எமி ரேட்டைச் சேர்ந்த ஷார்ஜாவில் கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அங்கு வசிக்கும் இந்தியர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஷார்ஜா கோர்ட்டு வழக்கை விசாரித்து 17 பேருக்கும் மரண தண்டனை விதித்தது.
இந்த நிலையில்
கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ. 4 கோடி நிவாரணம் வழங்க 17 பேரும் முன் வந்தனர். இதையடுத்து அவர்களை கோர்ட்டு விடுதலை செய்தது. இதை எதிர்த்து கொலை சம்பவத்தின்போது காயம் அடைந்த 2 பேர் மீண்டும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து 17 இந்தியர்களும் மீண்டும் கைதாகி ஷார்ஜா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். நாடு திரும்ப இருந்த நிலையில் ஒரு நாளுக்கு முன்னதாக அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக