புது தில்லி : தில்லியில் உள்ள முஸ்லீம்களின் மிகப் பெரும் பள்ளிவாயில்களுள் ஒன்றான ஜும்மா மசூதி பகுதியில் 70 வருட கால பழைய கட்டிடம் ஒன்று இடிந்ததில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி 8 நபர்கள் உயிரிழந்துள்ளதோடு 25 நபர்கள் காயமடைந்துள்ளனர்.
தில்லி சாந்தினி மகால் பகுதியில் உள்ள கட்டிடத்தில் இரவு 8 மணிக்கு ஏற்பட்ட இந்நிகழ்வு கடந்த நவம்பரில் டெல்லி லஷ்மி நகரில் கட்டிடம் இடிந்ததால் 70 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தை நினைவூட்டுவதை போல் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள்.இது குறித்து கருத்து தெரிவித்த தீயணைப்பு அதிகாரி அருகில் வேலை நடந்து கொண்டிருந்த கட்டிடம் நொறுங்கியதால் ஏற்பட்ட பாதிப்பால் இக்கட்டிடம் நொறுங்கியதாக கூறினார். ஆனால் வேறு சிலரோ இடிபட்ட கட்டிடத்தில் கதவு அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்த போது அக்கட்டிடத்தை தாங்கி கொண்டிருந்த சுவர் இடிந்ததால் இவ்விபத்து ஏற்பட்டதாக கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக