தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.9.11

உலக விமானப் பறப்பு வரலாற்றில் புதிய சாதனை எழுதப்படுகிறது..



கடந்த மூன்று ஆண்டு காலமாக பறப்பதற்கு தாமதம் செய்யப்பட்டுவந்த சூப்ப போயிங் விமானமான றீம்லைனர் 787 பறப்பெடுக்க தயாராகிவிட்டதாக ஏ.என்.ஏ விமான சேவை அறிவித்துள்ளது. இந்த விமானம் இதுவரை உலகில் நடைபெற்ற விமான சேவைகளில் புதியதோர் சரித்திரத்தை எழுதப்போவதாகவும் அது அறிவித்துள்ளது. அமெரிக்க வோஷிங்டனுக்கும் – ஜப்பான் டோக்கியோவுக்கும் இடையே இந்த விமானம் பறக்கவுள்ளது. குறைந்த எரிபொருளுடன் கூடிய வேகத்தில் பறப்பதற்கான முயற்சிகளை வெற்றிகரமாக முடிக்கவே மூன்று வருடங்கள் தாமதிக்கப்பட்டது. கனவு உலகத்தில் மிதப்பதைப் போல சுகமாக ஆகாயத்தில் பறந்து செல்லக்கூடிய அற்புத சேவையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கால் நீட்டுவதற்கு விஸ்தாரமான இடம், பாரிய சன்னல்கள், எழுந்து நடமாட தாராளமான இடம், நல்ல காற்றோட்டம், ஒரு பூங்காவில் இருப்பதைப்போன்ற பயண அலுப்பு தெரியாத பறப்பு என்று அமர்க்களப்படுத்துகிறது. இதுவரை எந்தவொரு நாட்டிலும் அமலில் இல்லாத விமான சேவை இதுவாகும். இதம் – சுகம் – சொகுசு மட்டுமல்ல இந்த விமானங்கள் விரைவும் கொண்டவை. இவற்றின் மோட்டர்கள் அசுரசக்தி கொண்டவை என்பதும் மறுக்க முடியாத விடயமாகும். உலகின் ஓர் அந்தத்தில் இருந்து மறு அந்தத்தை அலுங்காமல் குலுங்காமல் தொடும் பயணமாகும்.

0 கருத்துகள்: