தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.3.12

அமெரிக்காவின் அடுத்த இலக்கு இந்தியா!–சம்பிக்க ரணவக்க!


காஷ்மீர் விவகாரத்தைக் கொண்ட இந்தியாவானது அமெரிக்காவின் அடுத்த இலக்காக இருக்கலாம் எனவே ஜெனீவாவில் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும் என மின்சக்தி வலுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று கூறினார்.ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தீர்மானம் சமர்ப்பிக்கப்படும்போது இந்தியா புத்திசாலித்தமான தீர்மாமொன்றை மேற்கொண்டு சீனா, ரஷ்யா ஆகியனவற்றுடன் இணைந்திருக்கும்என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது
செல்வாக்கை நிலைநாட்டும் நோக்கத்தின் ஒரு முயற்சியாகவே இத்தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்துள்ளதாக ‘மேற்குலக சதிகள்; அவற்றை நாடு எதிர்கொள்வது எப்படி?’ எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறினார்.
‘அவர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்  போன்று இந்த நாடு இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். அபிவிருத்தியடைவதையும் வலிமையடைவதையும் தடுப்பதற்கு அவர்கள் அனைத்தையும் மேற்கொள்கின்றனர்.
எல்.ரி.ரி.ஈ.யை யுத்தத்தில் தோற்கடித்தது ஒரு பாரிய வெற்றியாகும். அது உலக சமாதானத்தை நோக்கிய ஒரு பெரும் நகர்வாகும்’ என அவர் கூறினார்.  ஐரோப்பிய, அமெரிக்க, பிரித்தானிய தேர்தல் பிரசாரங்கள் பெரும்பாலும் பயங்கரவாத அமைப்புககளின் நிதியின் மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினர்.
ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் வண. அதுரெலிய ரதன தேரர்  உரையாற்றுகையில், “வெவ்வேறு காலகட்டங்களில் உள்நாட்டு பிரச்சினைகள் நிலவியபோது இந்நாடு வெளிநாட்டவர்களின் கைளில் வீழ்ந்தது. எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய தன்னிறைவான நாடாக இந்நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்’ கூறினார்.
இதற்காக அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்கு நாடுகளினால் சந்தைப்படுத்தப்படும் உணவு பானங்களை தவிர்க்க வேண்டும். மற்றது எளிமையான வாழ்க்கையை  பின்பற்ற வேண்டும் என அவர் கூறினார்.
மேல் மாகாண  அமைச்சர் உதய கம்மன்பில உரையாற்றுகையில், ‘உலகின் மிக கொடிய பயங்கரவாத இயக்கத்தை நாம் தோற்கடித்த நிலையில், தலிபான்களை தோற்கடிப்பதற்கு அமெரிக்காவும் அதன் சகாக்களும் இன்னும் ஆப்கானிஸ்தானில் போராடிக் கொண்டிருப்பதால்  அவர்கள் எம்மீது கோபமாக இருக்கிறார்கள்’ என்றார்.

0 கருத்துகள்: