தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.3.12

உலகின் மிகப் பிரமாண்டமான சிறைச்சாலை இஸ்ரேலில்


டெல் அவிவ்: தென் இஸ்ரேலில் உலகிலேயே மிகப் பிரமாண்டமான சிறைச்சாலையொன்றைக் கட்டும் பணி வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த சனிக்கிழமை (10.03.2012) வெளியான பத்திரிகைச் செய்தியில், இச்சிறைச்சாலை 8000 கைதிகளை அடைத்துவைக்கக்கூடிய வசதியைக் கொண்டிருக்கும் என்றும், சுமார் 18 மாதங்களுக்கு முன்பே இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் சிறைச்சாலைக் கட்டுமானப் பணிகளுக்கான அனுமதியை வழங்கிவிட்டது எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, "ஆக்கிரமிக்கபட்ட இஸ்ரேலியப் பிரதேசத்தினுள் பிரவேசிக்கும் பலஸ்தீனர்கள் மூன்று வருடகாலம் எந்தவித விசாரணையும் இன்றித் தடுத்துவைக்கப்படுவார்கள்" என கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை புதிய சட்டமொன்று பிறப்பித்துள்ளது.

மேலும், "ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்ரேலியப் பிராந்தியங்களுக்குள் பலஸ்தீனர்கள் வந்து தொழில் செய்வதானது, இஸ்ரேலியர்களுக்கான தொழில்வாய்ப்புகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும்" என அண்மையில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: