தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.3.12

மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ள வங்கி கொள்ளையர்களின் 2 சடலம் நிறம் மாறியது!!


போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்ட வங்கி கொள்ளையர்களில் எஞ்சியுள்ள 2 சடலங்கள் கருத்துவிட்டன. இதனால், உடலை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.வேளச்சேரியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த வங்கி கொள்ளையர்களான வினோத் குமார் என்கிற அஜய்குமார் ராய், சந்திரிகாரே, ஹரிஷ்குமார் (எ) ராஜிவ்குமார், வினய் பிரசாத், அபய்குமார் ஆகிய 5 பேரையும் பிப்ரவரி 23ம் தேதி அதிகாலை போலீசார் என்கவுன்டரில் சுட்டு கொன்றனர்
இவர்களின் உடல்கள் பிரேத
பரிசோதனைக்கு பிறகு அரசு பொது மருத்துவமனையில் பதப்படுத்தி (எம்பாமிங்) வைக்கப்பட்டன.

இவ்வாறு பதப்படுத்தப்பட்ட உடல்கள் மட்டுமே விமானம் மற்றும் ரயிலில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். கொள்ளை கூட்டத்தின் தலைவன் அஜய்குமார் ராய் உடலை, பெற்றோர் வாங்கிக்கொண்டு விமா னம் மூலம் பீகார் சென்றனர். அதன்பின், கடந்த 5ம் தேதி ஹரிஸ்குமார் என்கிற ராஜிவ்குமார், வினய் பிரசாத் உடல்களை உறவினர்கள் வாங்கி கொண்டு சொந்த ஊரான பீகார் மாநிலத்திற்கு ரயில் மூலம் சென்றனர்.
இன்னும் சந்திரிகா ரே, அபய்குமார் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை கூடத்தில் குளிரூட்டப்பட்ட அறை யில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதப்படுத்துவதால் உடல் விரைவில் கருப்பாக மாறி விடும். உடலில் சுருக்கங்கள் ஏற்படும்.

ராஜிவ்குமார், வினய் பிரசாத் உடலை வாங்குவதற்காக, பீகாரில் இருந்து கடந்த 5ம் தேதி வந்த உறவினர்கள், உடல்கள் கருத்திருந்ததால் அடையாளம் காண முடியாமல்  திணறினர்.
இறுதியில் ஒரு வழியாக உடலை பெற்று சென்றனர். ஆனால், இன்னும் 2 உடல்கள் யார் என்பதே அடை யாளம் தெரியவில்லை. இவர்கள் யார் என்ற விவரத்தை போலீ சார் கண்டுபிடித்தாலும், உடல்களை அடையாளம் காண்பதில் மேலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

பதப்படுத்தும் முறை பார்மலின் உள் ளிட்ட ரசாயன கலவை 4 லிட்டர் அளவு எடுத்து, பிரேத பரிசோதனை செய்யப்பட உடலில் ஊசி மூலம் ஏற்றப்படுகிறது. இதனால், அந்த உடலில் இருந்து துர்நாற்றம் வீசாது. உடலும் கெட்டுப்போகாது. ஆனால், பதப்படுத்தப்பட்ட உடலை பிரேத பரிசோதனை செய்ய முடியாது. அப்படி செய்தாலும், எப்படி இறந்தார் என்ற எவ்வித மான உண்மையும் தெரியாது.

0 கருத்துகள்: