தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.3.12

கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட்) பெற தலாக் சான்றிதழை ஏற்க நீதிமன்றம் உத்தரவு


மதுரை : முஸ்லிம் சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்ணுடைய மகளுக்கு ”தலாக்” சான்றிதழ் அடிப் படையில் கடவுச்சீட்டு ( பாஸ்போர்ட்) வழங்கலாம் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ள து.ரம்ஜான் பேகம் என்பவர் ஷாகுல் ஹமீது என்பவ ரை திருமணம் செய்துள்ளார். பின்னர் தம்பதியருக் கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரண மாக விவாகரத்து பெற்றுள்ளார். இதற்கான விவா கரத்து சான்றிதழை
கோபாலபட்டிணம் முஸ்லிம் ஜமாஅத் 26.12.2011 அன்றுஅளித்துள்ளது.  இவருக்கு மௌபிகா ரிபானா என்ற பெண் குழந்தை உள்ளது. 

தனது குழந்தை மௌபிகா ரிபானாவுக்காக அவர் தஞ்சாவூரில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தில், கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். ஜமாஅத் வழங்கிய விவாகரத்து சான்றிதழை அங்கீகரிக்காத  அதிகாரி விவாகரத்து பெற்றதற்கான சான்றிதழை நீதிமன்றத்திலிருந்து பெற்று வரும்படி கோரியுள்ளார்.

இதனை எதிர்த்து ரம்ஜான் பேகம் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார். விவாகரத்து பெற்றதற்கான தெளிவான சான்றிதழைத்தான் தாங்கள் கோரியதாக கடவுச்சீட்டு அலுவலகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி சசிதரன், ஜமாஅத் அளித்துள்ள தலாக் சான்றிதழ் படி கடவுச்சீட்டு வழங்கலாம் என்றும், விவாகரத்து பெற்றதற்காக நீதிமன்றத்திலிருந்து அதற்கான ஆதாரம் பெற்றுத் தரவேண்டும் எனக் கோரக் கூடாது என்றும்  தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

மனுதாரர் முஸ்லிம் தனியார் சட்ட வரையறைக்குள் வருபவர் என்றும் எனவே முஸ்லிம் தனியார் சட்டப்படி அளித்துள்ள விவாகரத்து சான்றிதழை கடவுச்சீட்டு அலுவலகம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் நீதிபதி சசிதரன் தெரிவித்துள்ளார். தலாக் மூலம் விவாகரத்து பெற்றதை மனுதாரர், கடவுச்சீட்டு அதிகாரியிடம் ஒரு மனு மூலம் தெரிவிக்க வேண்டும், இதில் ஏதும் சந்தேகம் இருந்தால் காவல்துறை அல்லது வருவாய்த்துறை மூலம்  விசாரணை நடத்தி கடவுச் சீட்டு வழங்கலாம் என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: