தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.3.12

ஆப்கான் படுகொலைகளைப் பார்த்து பராக் ஒபாமா அதிர்ச்சி


ஆப்கான் கந்தகார் பகுதியில் வீறு கொண்ட அமெரிக்கப் படையினன் ஒருவன் நடாத்திய வெறியாட்டத்தில் கந் தகார் பகுதியில் 16 அப்பாவிப் பொது மக்கள் கொன்று வீ சப்பட்டது தெரிந்ததே. இந்த விவகாரம் தொடர்பாக ஆப் பான் அதிபர் ஹர்மீட் கார்சாயுடன் தொலைபேசிவழியா க உரையாடிய அமெரிக்க அதிபர் தமது வருத்தங்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பலத்த அதிர்ச்சி அ டைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.இந்த நிகழ்வு குர்ரான் எரிப்புப் போராட்டத்தால்
உருவேறியுள்ள ஆப்கானில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல நிலமைகளை மோசமாக்கி யுள்ளது. ஆப்கான் பிணக்குழியாக மாறப்போகிறது என்று தலபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். உடனடியாக போதிய விளக்கம் தரவேண்டுமென ஆப்கான் அதிபர் கேட்டாலும், நிகழ்வை பொதுமைப்படுத்தி பார்க்க வேண்டாம் என்று அமெரிக்கா கேட்டுள்ளது. நடந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட படையினனின் செயல் அவன் கைதாகியுள்ளான் விசாரணைகள் தொடர்கின்றன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த 2003ம் ஆண்டில் இருந்து முடிவே இல்லாமல் தொடரும் போர் நேட்டோ படைகளுக்கு பலத்த நம்பிக்கை வரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையே அங்கிருந்து அடுத்தடுத்து வரும் அவல நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. மேலும் ஆப்கான் படைகளுக்கு பயிற்சி கொடுத்தாலும் அதனால் யாதொரு பயனும் கிடையாது என்பது தற்போது கள யதார்த்தமாக உள்ளது. ஆப்கான் படைகளை தனியே அனுப்பினால் கொள்ளை, கொலை போன்றவற்றை சர்வ சாதாரணமாக செய்யும் ஒழுக்கம் கெட்டவர்களாக உள்ளார்கள். இப்போது அவர்களை கண்காணித்தபடி நேட்டோ படைகள் போகிறது. ஆகவே ஆப்கானில் இருந்து இறுதிவரை வெற்றியுடன் வெளியேற முடியாது என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்துள்ளது. நேட்டோ செயலர் ஆனஸ் போ ராஸ்முசனோ 2014 ல் ஆப்கானில் இருந்து நேட்டோ வெளியேறும் என்ற உறுதியை இனி தம்மால் தர முடியாது என்று சற்று முன்னர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: