ஈரான் மீது எதிரி நாடுகள் தாக்குதல் நடத்துவதற்கு எந்த நா டு உதவி புரிகிறதோ அந்நாட்டின் மீது தாக்குதல் நடத் து வோம் என அந்நாட்டு இராணுவம் மீண்டும்எச்சரிக்கை வி டுத்துள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்ப தா க அ மெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட் டியுள் ள நிலையில், ஈரான் மீது பல்வேறு பொருளாதா ரத்தடைக ளை விதித்துள்ளன. இந்நிலையில், ஈரானின் தென்பகுதியி ல் நேற்று
முன்தினம் அந்நாட்டின் இராணு வமான ஈரான் பு ரட்சிப் படை இரண்டு நாள் போர் ஒத்திகையை தொடங்கியது. இந்த ஒத்திகை சி றிய அளவில் தான் நடக்கும் என அந்நாட்டு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஈரான் புரட்சிப் படையின் துணை தளபதி உசேன் சலாமி நேற்று விடுத்த அறிக்கையில், எந்த நாடாவது ஈரான் மீது தாக்குதல் நடத்த எதிரி நாடுகளுக்கு இடம் கொடுக்குமானால் அந்நாட்டின் மீது ஈரான் கடும் தாக்குதல் நடத்தும் என எச்சரித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக