கர்நாடக சட்டப் பேரவை குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது ஆளும் கட்சியான பா.ஜ.க அமைச்சர்கள் சூடான பலான வீடியோ பார்த்துக்கொண்டிருந்தது ஊடகங்களில் வெளியாகி உள்ளது.லக்ஷ்மன் சவாதி மற்றும் சி.சி. பாட்டீல் ஆகிய இரு அமைச்சர்களும் சட்டப்பேர்வையில் சூடான விவாதம் நடந்து கொண்டிருந்த வேளையில் தங்கள் கைப்பேசியில் பலான படம் பார்த்துக்கொண்டிந்த காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து
அவர்களின் வீடுமீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்துள்ளது.
அவர்களின் வீடுமீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்துள்ளது.
கடந்த மாதம் ஜனவரி-26 இந்திய குடியரசு தினத்தன்று பாகிஸ்தான் கொடியேற்றி மதக்கலவரத்தை தூண்ட முனைந்த நிகழ்வு குறித்து கர்நாடக சட்டப் பேரவையில் காராசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது கூட்டுறவு அமைச்சர் லக்ஷ்மன் சவாதி தனது கைப்பேசியில் பதிவு செய்து வைத்திருந்த பலான வீடியோவை ரசித்துக்கொண்டிருந்ததை, சட்டமன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் செய்தி நிறுவனம் (TV9) அதை துல்லியமாகப் படம்பிடித்து ஊடகங்களில் வெளியிட்டுள்ளதால் பாஜக அரசுக்கு மேலும் மேலும் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதலமைச்சர் D.V. சதானந்த கவுடா செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த கேவலமான நிகழ்வு உண்மையாக இருக்கும் பட்சத்தில் சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார்" என்று தெரிவித்தார்.
கர்நாடக பா.ஜ.க தலைவர் K.S.ஈஸ்வரப்பா கூறும்போது, "இதுகுறித்து அமைச்சர்களுடனும் தேசிய தலைவர்களுடனும் ஆலோசனை நடத்திய பிறகே நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் H.D.குமாரசாமி கூறுகையில் சட்டசபை வரலாற்றில் இஃது ஓர் கரும்புள்ளி என்று தெரிவித்தார்.

பாஜகவைச் சேர்ந்த சிலர், "அமைச்சர்கள் செய்தி பார்த்துக்கொண்டிருந்தபோது, அச்செய்தியில் வந்த வன்புணர்வு காட்சிகளே அவை" என்றும் "பலான வீடியோக்கள் அல்ல" என்றும் "குறிப்பிட்ட தொலைக்காட்சி அலைவரிசை பாஜகவுக்குக் களங்கம் விளைவிக்க வேண்டுமென்பதற்காக இதனைத் திட்டமிட்டு பொய்யாக திரித்துள்ளனர்" என்று கூறியுள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் தூர்தர்சன் போன்று சில தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளும் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பி வருவது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக