இந்தியாவுக்கான நிதி உதவித் திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வழங்கி வரும் உதவிகளை நிறுத்த வேண்டும் என்று ம், வளர்ந்த நாடுகளின் நிதியுதவிகளை நம்பியிருக்க வேண்டிய நிலையில் இந்திய அரசு இல்லை என்றும் இங்கிலாந்தின் ஆளும் கட்சி எம்.பி.க்கள் சிலர் வலி யுறுத்தியிரு
ந்தனர். இதனால், தற்போது பல்வேறு திட்டங்களுக்கான நிதியு தவியை இங்கிலாந்து நிறுத்தக் கூடும் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், லண்டலின் நிருபர்களிடம் பேசிய இங்கிலாந்து பிரதமரின் செய்தித் தொடர்பாளர். "இந்தியாவுக்கு உதவுவது பற்றி மறுபரிசீலனை செய்யப்பட மாட்டாது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட உதவிகளைத் தொடருவது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இந்தியாவுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்கும் அதேவேளையில், ஏழ்மை நிலையில் உள்ள மூன்று மாநிலங்களில் மட்டும் கவனம் செலுத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.
உலக அளவில் மிகுந்த வறுமையில் வாடும் மக்களில், குறிப்பிட்ட அந்த மூன்று மாநிலங்களில் ஏராளமானோர் உள்ளனர். ஏழைகளுக்கு உதவுவது என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. எனவே, இந்தியாவுக்கான உதவிகள் தொடரும்," என்றார் டேவிட் கேமரூனின் செய்தித் தொடர்பாளர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக