பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முற்றாக தடை செய்யப்படகூடிய வாய்ப்பில்லை என மத்திய தொலை த்தொடர்பு, தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ச ச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட 15 இணையத்தளங்கள் ஊடாக ஆட்சேபத்துக்குரிய கருத்துக்க ள் மக்களிடையே பரவுவதாக கூறி சுமத்தப்பட்ட குற்றச்சாட் டின் கீழ், அப்பகுதிகளை எடுத்துவிடும் படி சமூக தளங்களுக் கு டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில்
உத்தரவிட்டது. இந் நிலையில் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டியது குறித்த சமூக வலைத்த
ளங்களின் கடமை என வலியுறுத்தியுள்ள சச்சின் பைலட், எனினும் இந்த விடயத்தில் குறித்த தளங்களை முற்றாக தடை செய்வது எனும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.உத்தரவிட்டது. இந் நிலையில் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டியது குறித்த சமூக வலைத்த
இந்தியாவில் இப்போது 10 கோடிக்கு அதிகமானோர் இணையத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் இன்னமும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த விஷயத்தில் நாமும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். குறித்த இணையத்தளங்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக