தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.2.12

மாலைதீவில் போராட்டம் : ஜனாதிபதி இராணுவத்திடம் பாதுகாப்பு அடைக்கலம் !

மாலைதீவில் ஏற்பட்டுள்ள உள் நாட்டுக் குழப்பங்களை த் தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதி முகம்மத் நஸீத் தேசிய இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பு அடை க்கலம் பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. சில வாரங்க ளுக்கு முன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கைது செய்யுமாறு இராணுவத்தினருக்கு அவர் உத்தரவி ட்டிருந்ததைத் தொடர்ந்து, மாலைதீவில் அமைதியின் மை ஏற்பட்டது.இவ்வாறான சூழ்நிலையில் அங்கு ஆர் ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களுடன்

காவல்துறையைச் சேர்ந்த சிலரும் இ ணைந்து கொண்டுள்ளதாகவும், அரச வானொலியை அவர்கள் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இவ் வானொலியில் எதிர்க்கட்சிகளின் ஒலிபரப்புக்களும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குழப்பமான சூழ்நிலைகளைத் தொடர்ந்து மாலைதீவு இராணுவத்திடம் பாதுகாப்பு அடைக்கலம் பெற்றிருக்கும், ஜனாதிபதி மொஹமட் நசீட் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், நாட்டின் அதிபராக துணை ஜனாதிபதி மொஹமட் வஹீட் ஹசனை நியமிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் மாலைதீவு இராணுவ தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்: