தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.2.12

சிரியாவில் இருந்த அமெரிக்கா பிரான்ஸ் இத்தாலி தூதரகங்கள் மூடப்பட்டன

அமெரிக்கா, தமது சிரியாவில் உள்ள தனது தூதரகங்க ளை மூடுவதாக நேற்று அறிவித்த பின்னர் இன்று அ தைவிட வேகமான அதிரடியாக இத்தாலி, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் தமது சிரிய நாட்டு தூதரகங்க ளை மூடுவதாக அறிவித்துள்ளன. உலகத்தின் பாரிய வல்லரசுகளுடன் உறவை முறித்துக் கொண்டு இரண் டு கம்யூனிச நாடுகளை நம்பி வண்டியோட்ட வேண்டி ய அவல நிலைக்கு சிரியா தள்ளப்பட்டுள்ளது. இதுவ ரை 17 நாடுகள் தமது சிரிய
தூதரகங்களை மூடி அங்கு நடைபெறும்மானிட படுகொலைகளுக்கான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. பி ரிட்டனும் தமது தூதராலய அதிகாரியை உடனடியாக பிரிட்டன் அழைத்து பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. பகரைன், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, அரபு எமிரேட்ஸ், துனீசியா என்பன தூதுவர்களை திருப்பி அழைத்த முக்கிய நாடுகளாகும். அதேபோல தமது நாடுகளில் உள்ள சிரிய தூதராலயங்களையும் உடனடியாக மூடிவிட்டு வெளியேறும்படி கேட்டுள்ளன. இந்த விவகாரத்தில் மிகவும் நொந்து நூலாகியிருப்பது ரஸ்யாதான். கடந்த 1969ம் ஆண்டில் இருந்து சிரியாவுடனான உறவுகளை ரஸ்யா பெரியளவில் பேணி வருகிறது. மத்திய கிழக்கில் சிரியாவில் மட்டும்தான் ரஸ்யாவின் ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சர்வாதிகாரி அஸாட் பதவி விலகினால் ரஸ்யாவின் இறுதி ஒரு தளமும் பறிபோய்விடும். ரஸ்ய வெளிநாட்டு அமைச்சர் சார்ஜி லேரேவ் தற்போது டமாஸ்கஸ்சில் நிற்கிறார். அதேபோல அரபு லீக் கண்காணிப்பாளரும் நிற்கிறார்கள் ஆனால் பொது மக்கள் மீதான ஆட்டிலறி தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றவண்ணமுள்ளன. ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் பேசி முடிப்பதற்கான காலம் கடந்துவிட்டது, ஆஸாட் றெஜீம் கூண்டோடு பதவி விலக வேண்டியதைத் தவிர வேறு மார்க்கம் அங்கிருப்பதாக தெரியவில்லை. சற்று முன்னர் பத்திரிகையாளரிடையே பேசிய ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி லாரோவ் கூறும்போது சிரிய தலைவர் தமது படைகளின் தாக்குதல்களை நிறுத்த உடன்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்தோடு அடிப்படை சட்டங்களை மாற்றும் சர்வஜன வாக்கெடுப்பிற்கும் அவர் உடன்பட்டுள்ளதாகவும் விரைவில் இது நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: