தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.2.12

ஃபேஸ்புக்கில் இளைஞர்களை வசீகரிக்கும் 'அப்துல்கலாம்' பக்கம்!

முன்னாள் ஜனாதிபதியும் அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது பதிவிட்டு வரு கிறார். இந்த அதிகாரப்பூர்வ பக்கத்துக்கு இந்திய இணையவாசி க ள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இளம் தலைமு றையினரின் மேம்பாட்டின் மீது அக்கறை கொண்ட கலாம் தொட ர்பாக ஃபேஸ்புக்கில் ஏற்கெனவே நிறைய பக்கங்கள் உள்ளன. அ வை அனைத்தும் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டவை. இந்த நி லையில், தாமே அவ்வப்போது
நிலைத்தகவல்களை பதிவிடுவதற்கு அதிகாரப்பூர்வமாக பேஸ்புக் பக்கத்தை உருவாக்கியிருக்கிறார், அப்துல் கலாம்.

http://www.facebook.com/OfficialKalam என்ற அந்தப் பக்கம் உருவாக்கப்பட்ட சில தினங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'விருப்பங்களை' வசப்படுத்தியிருக்கிறது. 

தனது பயணங்கள், அனுபவங்கள் உள்ளிட்ட தகவல்களுடன், அவ்வப்போது இளைஞர்களை நல்வழிப்படுத்தும் அறிவுரைகளையும் ஊக்கத்தையும் அளித்து வருகிறார், கலாம்.

சமூகத்துக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் விவாதங்களைத் தூண்டும் வகையில் எழுதி வரும் கலாம், 'டைரிக் குறிப்பு'களைப் போலவே எப்போதும் இளைஞர்களுடன் தொடர்பில் இருக்க விரும்புகிறார்.

0 கருத்துகள்: