தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.2.12

முகம்மது நசீத் இன் குடும்பத்தினர் சிறிலங்காவில் தஞ்சம்


மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹம த் நசீத் இவரது ஆட்சி அதிகாரத்துக்குஎதிராக மா லைதீவில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக, தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டி நிலைக்குத் தள்ள ப்பட்டார். அவரது பதவி விலகலைத் தொடர்ந்து , மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக துணை ஜனாதிபதி மொஹமட்
வஹீட் ஹசன் சத்தியப்பிரமாணம் செய்து கொண் டார்.பின்னர் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களில் நஷீத் தாக்கப்பட்டதாகசெய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது நசீட் இன் குடும்பத்தினர் சிறிலங்காவில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஏ. எப் .பி செய்திகள் தெரிவிக்கின்றன.

நசீட் இன் மனைவியும் அவரது மகளும் சிறிலங்கா வந்திருப்பதாகவும் அவர்கள் ஜனாதிபதி மஹிந்தாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும் ஜனாதிபதி செய்தி தொடர்பாளர் பந்துல ஜயசேகர ஏ.எப்.பிக்கு கூறியுள்ளார்.


0 கருத்துகள்: