தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.2.12

மிலாதுநபி ஊர்வலத்தில் இந்திய ராணுவத்தின் சீருடை அணிந்த 100 பேர் மீது வழக்கு.

காசர்கோட்டில் 2 தினங்களுக்கு முன்பு நடந்த மீலாதுநபி ஊர்வ லத்தில் சிலர் இந்திய ராணுவத்தின் சீருடை அணிந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மத்திய உளவு த்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கேர ளாவில் கடந்த 5ம் தேதி மீலாதுநபி தினம் வழக்கமான உற்சாகத் துடன் கொண்டாடப்பட்டது.  காசர்கோடு மாவட்டம் காஞ்சங்கா ட்டில் உள்ள மிலாத் ஷெரீப் கமிட்டி சார்பில் காசர்கோட்டில் மீ லா து நபி தின ஊர்வலம் நடந்தது.  இதில் கலந்து

கொண்ட சிலர் இந்திய ராணுவத்தினர் பயன்படுத்தும் சீருடை அணிந்திருந்தனர். மீலாதுநபி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ராணுவ சீருடை அணிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அறிந்ததும் ஹோஸ்துர்க் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் செல்வதற்குள் ஊர்வலம் முடிந்து விட்டதால் ஊர்வலத்தின் வீடியோ காட்சிகளை வரவழைத்து போலீசார் பரிசோதித்தனர். 

இதில் ஊர்வலத்தில் 100 பேர் ராணுவ சீருடையுடன் கலந்து கொண்டது தெரியவந்தது.  ராணுவ வீரர்கள் தவிர வேறு யாரும் ராணுவ சீருடையை பயன்படுத்தக் கூடாது. இதையடுத்து சீருடையுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்ட 100 பேர் மீது ஹோஸ்துர்க் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மத்திய உளவுத்துறையினரும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

0 கருத்துகள்: