தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.2.12

அமெரிக்காவில் குருத்வாரா மீது திடீர் தாக்குதல்

வாஷிங்டன், 10 பிப்ரவரி – அமெரிக்காவில் கட்டப்பட்டு வரும் சீக்கியர்களின் குருத்வாரா கோவில் மீது தாக்குத ல் நடத்தப்பட்டுள்ளது. மிச்சிகன் மாநிலத்தில், ஸ்டெர்லி ங் ஹைட்ஸ் எனும் இடத்தில் குருத்வாரா கோவிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனி டையே, கடந்த 5-ஆம் தேதி சிலர் அக்கட்டுமான பணி நிறைவடையாத
அந்த குருதுவாரா மீது சதிநாச தாக்குதல் நடத்தியதாக அ மெரிக்க சீக்கியர் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள் ளனர்.அந்த குருத்வாரா மீது தாக்குதல் நடத்தியவர்கள் இனவெறியைத் தூண்டும் வகையிலும், ஆபாச வார்த்தைகளாலும் திட்டியதாக அந்த சீக்கியர் அமைப்பின் நிர்வாகக் குழுவினர் மேற்கொண்ட காவல்துறை புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளன.இத்தாக்குதலை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்: