கடாபி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு, இன்னமும் 72 மணி நேர கால அவகாசம் அளிப்பதாக லிபிய அரசு எதிர்ப்பாளர்களின் புரட்சிக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய லிபியன் கவுன்சில் (புரட்சிக்குழு) தலைவர் முஸ்தாபா அப்டெல் ஜலில் அல்ஜசீராவுக்கு தெரிவிக்கையில்,
அதிபர் மௌம்மர் கடாபி, நாட்டைவிட்டு 72 மணி நேரத்தில் வெளியேறுவாரானால், அவர் மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை வாபஸ் வாங்கிவிடுகிறோம். இது தான் கடாபிக்கு நாம் வழங்கும் இறுதி வாய்ப்பு! எமது கோரிக்கைகளை அவர் செவிமடுப்பார் என நம்புகிறோம்.1. எம் போராட்டகுழுவினர் மீது கடாபி கட்டவிழ்த்து விட்டுள்ள அனைத்து வகையான இராணுவ தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்திவிட வேண்டும்.
2.கடாபி நாட்டைவிட்டு 72 மணி நேரத்தில் வெளியேறிவிட வேண்டும்.
3.எமது உரிமைகளை விட்டுத்தர வேண்டும். எம்மீதான அடக்குமுறைகள், வன்முறைகள், படுகொலைகள் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்.
இம்மூன்று கோரிக்கைகளையும் லிபிய அரசு செவிமடுக்கிறதா என நாங்கள் பொறுத்திருந்து பார்க்க போகிறோம். இக்கடைசி வாய்ப்பை அவர் தவறவிடுவாராயின், கடுமையான மோதல்களை தொடங்கப்போகிறோம் என அவர் தெரிவித்தார்.
இதனால் லிபிய விவகாரம் மேலும் பரபரப்பை உண்டுபண்ணியிருக்கிறது. இன்னுமொரு சோமாலிய உள்நாட்டு யுத்தம் போன்று லிபியாவில் நடைபெறும் வாய்ப்பை உருவாக்கி வருகிறார்கள் என கடாபியின் இளைய மகனும் கவலை தெரிவித்திருந்தார்.
இதேவேளை கடாபி பதவியிலிருந்து விலகுவது தொடர்பில் புரட்சிக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த இணங்கியுள்ளதாக வெளியான தகவல்களை லிபிய வெளிவிவகார அமைச்சு முற்றிலும் மறுத்துள்ளது. தேசிய தொலைக்காட்சியில் விடுத்த அறிக்கையில் இம்மறுப்பினை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ளது.
எனினும் கடாபி, தனது தூதுவர் ஒருவரை பெங்காசிக்கு அனுப்பி வைத்து, புரட்சிக்குழுவினருடன் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளதை புரட்சிக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, லிபியா மீது போர் விமானங்கள் பறக்க சர்வதேசம் தடைவிதிக்குமாயின் அது எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என புரட்சிக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதை தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உட்பட ஐ.நா சபையில் அங்கம் வகிக்கும் பல முக்கிய நாடுகள் லிபியா மீது போர் விமானங்கள் பறக்க தடை செய்யும் தீர்மானம் ஒன்றை கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதன் மூலம் லிபிய போர் விமானங்கள், தமது சொந்த மக்களையே குண்டுவீசி கொல்வதை தடுக்க முடியும் என அந்நாடுகள் கருதுகின்றன.
எனினும் இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்நிய நாடுகளின் நேரடி தலையீடாக இது அமையக்கூடும் என வீற்றோ அதிகாரமுடைய அந்நாடு எச்சரித்துள்ளது.

நன்றி:தமிழ் மீடியா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக