தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.3.11

பக்ரைனில் அவசரநிலை பிரகடனம்


மனாமா, மார்ச். 16- அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து பக்ரைனில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் எகிப்தின் மக்கள் புரட்சி, அடக்குமுறையில் இருக்கும் மற்ற சில நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட தாக்கத்தால் எழுச்சி கண்டுள்ளனர் பக்ரைன் மக்கள். அந்நாட்டில் அரசியல் மறுமலர்ச்சி ஏற்பட
வேண்டும் என ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ஆனால் அறவழியில் போராட முயன்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலர் பலியாகினர்.
பக்ரைனில் கலவரம் கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டிருப்பதால் அங்கு 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மன்னர் பிறப்பித்தார். மக்கள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக மன்னர் தெரிவித்தார்.
3 மாத கால அவசர நிலையின் போது பக்ரைன் படைகளுக்கு உதவுவதற்காக ஓமன் மற்றும் கத்தார் படைகள் அங்கு விரைந்துள்ளன. இதற்கிடையில் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதையும் பொருட்படுத்தாமல் கலவரத்தில் குதித்த மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் இறந்தனர், பலர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் பக்ரைன் நாட்டின் மீது முஸ்லிம் நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுக்க முன்வந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ராமின் மெஹ்மன்பரசாத் வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பான கல்ப் கோ ஆப்ரேசன் கவுன்சில் கூட்டத்தில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
பக்ரைன் நாட்டு மக்களின் தற்போதைய தீர்வு சட்டபடி அமைக்கப்பட உள்ள தலைமையை விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு எதிராக கல்ப் கூட்டமைப்பு நாடுகள் ராணுவ நடவடிக்கையில் இறங்கியிருப்பது வேதனையளிக்கிறது. இந்த செயலுக்கு பின்புலமாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது என்ற சந்தேகம் நிலவுகிறது. இதன்மூலம் உலகப்போர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பக்ரைன் நாட்டின் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி அதற்கு பதிலாக மாற்று தீர்வு மூலம் அந்நாட்டில் அமைதி ஏற்படுத்த வழிவகை காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்: