தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.3.11

23 வயதில் பாட்டியான இங்கிலாந்து பெண்


லண்டன், மார்ச். 8- இங்கிலாந்தில் 23 வயது பெண் ஒருவர் தனது 11 வயது மகள் ஆண் குழந்தை பெற்றதைத் தொடர்ந்து உலகின் இளம் வயது பாட்டி என்ற பெருமையினை பெற்றுள்ளார்.
ரிப்கா ஸ்டானீஸ்கியூ (23) என்ற பெண், ரோமேனியா நாட்டின் இன்வெஸ்தி எனும் கிராமத்தில் பிறந்த நாடோடி இனத்தை சேர்ந்த
பழங்குடியினராவார். ரிப்கா இங்கிலாந்தின் இயோனல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகளான மரியா என்ற 11 வயது பெண், ஒரு ஆண் குழந்தையினை பெற்றுள்ளார். இதன்மூலம் 23 வயதில் பேரக்குழந்தையினை பார்த்த உலகின் இளம்வயது பாட்டி என்ற பெயரினை பெற்றுள்ளார். பேரனுக்கு லூன் என பெயர் சூட்டியுள்ளார்.
இது குறித்து ரிப்கா கூறுகையில், எனது மகள் மரியா (11) ஆண் குழந்தைக்கு தாயாகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ரோமோனியாவில் நாடோடி கலாச்சாரத்தில் இது மிகவும் சாதாரணமான ஒன்று தான். முன்னதாக மரியா, நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று என்னிடம் கூறினார். அவரது திருமண ஆசைக்கு தடை போடாமல் நானும் சம்மதித்தேன். ரோமேனியாவின் நாடோடி கலாச்சாரத்தில் இளம் வயது திருமணம் சகஜமானது தான். எனது (இயோனாலை ) கணவரை திருமணம் செய்து கொள்ளும் முன்பு மிகுந்த போராட்டத்திற்கு இடையே பெற்றோரின் எதிர்ப்பை மீறி எங்கள் திருமணம் நடந்தது. அது போன்று என் மகளுக்கு (மரியா) ஏற்படக்கூடாது என்று தான் 11 வயதில் திருமணம் செய்து கொள்ள அனுமதித்தேன் என்றார்

0 கருத்துகள்: