தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.2.12

தமிழக சட்டசபையில் கைத்தொலைபேசிக்கு தடை : கர்நாடக சட்டசபை சம்பவ எதிரொலி ?

தமிழக சட்டமன்றில், கைத்தொலைபேசி பயன்படுத் துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இரு தினங்களுக் கு  முன், கர்நாடக சட்டசபையில் பாஜக உறுப்பினர்க ள் மூவர், ஆபாச படம் பார்த்தது தெரியவந்ததை அடுத் து அவர்கள் பதவி விலக நேர்ந்தது.இதனைக்கருத்திற் கொண்டு, தமிழக சட்டபேரவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டமன்றத்துள் கைத்தொலைபேசி க்கு தடைகொண்டு வரும் தீர்மானத்துக்கு, நேற்றைய அவைக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டி

ருப்பதாகத் தெரிய வருகிறது. சட் டபேரவை உறுப்பினர்கள் அவசரமாக எவருடனும் தொடர்பு கொள்ள வேண்டு மாயின் அதற்கு வசதியாக லாபியில் 10 க்கு மேற்பட்ட பொது கைத்தொலைபேசிகள் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இது தொடர்பிலான முறைப்படியான அறிவிப்பை பேரவை தலைவர் டி.ஜெயக்குமார் வெளியிடவுள்ளார்.
சட்டசபையில் புதுமுக உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து கைத்தொலைபேசி கொண்டு வருவதுடன், கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது அவை இடையூறாக ஒலிப்பதால், ஏற்கனவே சபாநாயகர் பல முறை எச்சரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: